LATEST NEWS
இந்த வாரம் ரெடியா இருங்க…. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த கமல்ஹாசன்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் போட்டியாளர்கள் டாஸ்க் நடக்கும் போது அதில் கவனம் செலுத்துவதை விட சண்டை போடுவதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதனை கமல்ஹாசனும் கடுமையாக கண்டித்தார். தற்போது போட்டியாளர்கள் ஓரளவு நன்றாக விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு 14 போட்டியாளர்கள் இருந்தனர். அந்த 14 போட்டியாளர்களில் நேற்று குயின்சி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் மற்ற போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளார். அதாவது வருகின்ற வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அந்த இரண்டு பேர் யாராக இருப்பார்கள் என்பது இன்று நடக்க போகும் நாமினேஷன் லிஸ்ட் வைத்து தான் தெரிய வரும். எனவே இதை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
