LATEST NEWS
திருமணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் கோலி சோடா பட நடிகை…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கோலிசோடா. இந்தத் திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை சாந்தினி. சென்னையில் பிறந்த இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். இவருக்கு கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது கல்லூரி படிக்கும் போது தனது நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையில் பார்த்த கோலிசோடா படத்தில் இயக்குனர் அவரை பின்னால் தொடர்ந்து சென்று போன் நம்பரை கேட்டுள்ளார்.
பின்னர் சாந்தினியின் வீட்டுக்குச் சென்று கோலி சோடா படத்தில் நடிக்க கூறிய நிலையில் சாந்தினி அந்த படத்தில் நடிக்க பல விருதுகளும் அவருக்கு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்ற இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே இவரை எந்த ஒரு படத்திலும் காணவில்லை.
இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. சமீபத்தில் தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்த நாளை அவர் கொண்டாடிய நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
