LATEST NEWS
பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டகாரராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கேஎல் ராகுல். இவர் கிரிக்கெட் அணியின் ஆட்டநாயகனாக இருந்தாலும் மறுபக்கம் அடிக்கடி காதல் வதந்திகளில் சிக்குவார். அவ்வகையில் சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளான அதியா ஷெட்டியை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல் வெளிநாடு சுற்றுலா பயணங்களின் போது அவருடன் இவரும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவருமே மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. அதே சமயம் தற்போது இந்த காதல் ஜோடி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்களின் திருமணம் ஜனவரி மாதம் 21 முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
