LATEST NEWS
“நான் தான் சார் மாப்பிள்ளை” திருமணத்தின் போது திடீரென என்ட்ரி கொடுத்த நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் டுவிஸ்ட்… போலீசையே அலற விட்ட பெண்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கா நகரில், பெண் ஒருவரின் இரண்டாவது திருமணத்தின் போது அவரது முதல் கணவர் திடீரென காவல் துறையினருடன் வந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்பர்பூர் எல்லைக்குட்பட்ட சிவபாபா பகுதியில் இந்த விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது திருமணச் சடங்குகள் முடிந்து மணப்பெண் தனது புதிய கணவருடன் கிளம்பத் தயாரான நேரத்தில், முதல் கணவர் திடீரென போலீசாரை அழைத்து வந்ததால் திருமண வீட்டில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதைத் தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பினரையும் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் இரு தரப்பு குடும்பத்தினரும், மணமக்களும் முன்னிலையில் பல மணி நேரம் நீண்ட பஞ்சாயத்து மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பும் தங்களது நியாயங்களை எடுத்துரைத்த நிலையில், சமரசமாகப் போகவே காவல் துறையினரும் அறிவுறுத்தினர்.
இறுதியில், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சுமுகமான பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டது. இந்த சுமுக உடன்பாட்டை அடுத்து, அந்தப் பெண் தனது முதல் கணவருடன் செல்லாமல், தனது இரண்டாவது கணவருடன் அவரது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும், அந்தப் பெண்ணின் முதல் திருமண விவாகரத்து தொடர்பான சட்டப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
