LATEST NEWS
இந்த மனசு யாருக்கு வரும்?…. ரசிகரை குழந்தை போல் கையில் ஏந்திய நடிகர் விஜய்…. பலரையும் நெகிழ வைத்த புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தமிழ் திரையுலகின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்தும் ஓரளவு ஆக்சன் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக விஜய் தனது ரசிகர்களை சந்திக்க தொடங்கியுள்ளார். வன்மையில் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்த நிலையில் அடுத்ததாக செங்கல்பட்டு, அரியலூர்,திண்டுக்கல் மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை நேற்று விஜய் பனையூரில் அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது கருப்பு நிற உடையில் வந்த விஜய்யை பார்த்து அவரை ரசிகர்கள் அனைவரும் வார வாரம் செய்தனர். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரால் நிற்க முடியாது என்பதை புரிந்து கொண்டு விஜய் அந்த நபரை கையில் குழந்தை போல் ஏந்தியபடி எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைக் கண்டு அவரின் ரசிகர்கள் நிகழ்ச்சியில் அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
