LATEST NEWS
“என் சகோதரர் பயணம் முடிந்து விட்டது”…. அண்ணன் இறப்பில் கலங்கிய குஷ்புவின் உருக்கமான பதிவு….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார். மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில் குஷ்பூ தன்னுடைய மூத்த சகோதரர் அபூபக்கர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் கடந்த நான்கு நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் குஷ்புவின் அண்ணன் அபூபக்கர் நேற்று காலமானார். இந்த தகவலை குஷ்பூ மிகுந்த மன வருத்தத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
As much as you want your loved ones to be with you forever,time comes to say goodbye. My brother's journey has ended today. His love & guidance will always be us. I thank everyone who have prayed for him. As they say,the journey of life is decided by God. Rest in peace #Bhaijaan. pic.twitter.com/Ryh0AsaZRC
— KhushbuSundar (@khushsundar) December 17, 2022
