LATEST NEWS
சினிமாவில் இருந்து விலகும் நடிகை சமந்தா…. திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்…. என்ன காரணம்….????
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நல மோசம் அடைந்துள்ளதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவோ விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மயோசரிஸ் நோய் பாதிப்பால் சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் தென்கொரியா நாட்டிற்குச் சென்று சமந்தா சிகிச்சை பெற்றுள்ளார். நோயின் தாக்கம் அதிகரித்ததால் படங்களில் தற்போது நடிக்கப் போவதில்லை என்ற முடிவை சமந்தா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வருகின்ற ஜனவரி மாதம் தான் கமிட் ஆகி டேட் கொடுக்கப்பட்ட குஷி திரைப்படத்தை முடித்துவிட்டு நீண்ட ஓய்வை சமந்தா எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
