40 வயதிலும் ஸ்லிம்மாக இருக்க இதுதான் காரணம்…. நடிகை திரிஷா சொன்ன சீக்ரெட்…. என்ன தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதிலும் ஸ்லிம்மாக இருக்க இதுதான் காரணம்…. நடிகை திரிஷா சொன்ன சீக்ரெட்…. என்ன தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டாப் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் திரிஷா.

Advertisement

இந்நிலையில் திரிஷா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் இத்தனை வருடங்களாக நீங்கள் ஒரே மாதிரி ஸ்லிம்மாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய த்ரிஷா, இந்தக் கேள்விக்கு சரியான பதில் என்னிடம் இல்லை. இதற்கு காரணம் குடும்ப ஜீன் என்று கூறலாம். வேறு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. எப்போதுமே என்னை நான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் அதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம் என்று த்ரிஷா கூறினார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in