விவாகரத்தாகி 2 மகன்கள்…. 45 வயதில் மறுமணம் செய்யப் போகும் நடிகை பிரகதி?…. அவரே சொன்ன காரணம் இதுதான்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்தாகி 2 மகன்கள்…. 45 வயதில் மறுமணம் செய்யப் போகும் நடிகை பிரகதி?…. அவரே சொன்ன காரணம் இதுதான்…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை பிரகதி. இவர் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய வீட்டுல விசேஷம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி விஜயகாந்தின் பெரிய மருது திரைப்படத்திலும் நாயகியாக நடித்து அசத்தினார்.

தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் அக்கா,அண்ணி மற்றும் அம்மா போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார். இவர் தன்னுடைய 20 வயதில் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு மகன்கள் உள்ளன. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது 45 வயதாகும் இவர் தனது மகன்களுடன் வசித்து வரும் நிலையில் மறுமணம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், இப்போது 45 வயது எனக்கு ஆகின்றது, நான் மறுமணம் குறித்து யோசித்ததே கிடையாது, என்னுடைய மகன்களுடன் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன், தற்போது என்னுடைய முழு கவனமும் பிட்டாக இருப்பது மற்றும் படங்களில் நடிப்பது மட்டும்தான் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in