LATEST NEWS
ஆபீஸ் சீரியல் நடிகை மதுமிளாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!
தமிழ் சினிமாவில் சீரியல்கள் மூலம் பிரபலமாகி நடிகைகளாக வளர்ந்து நிற்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை மதுமிளா. இலங்கை பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பிரபல சீரியல் ஆபீஸில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து பூஜை,ரோமியோ ஜூலியட் மற்றும் மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த வருடம் பெலிக்ஸ் ஜேம்ஸ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கனடாவில் வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி வீட்டில் தன்னுடைய பெண் குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
