VIDEOS
யுவன் சங்கர் ராஜாவின் அந்த பாட்டுக்கு பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட வீடியோ…. ரசித்துப் பார்க்கும் ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கையை சேர்ந்த ஜனனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே தனது சிரிப்பு மற்றும் இலங்கை தமிழ் பேச்சாளர் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர். இன்று இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி இந்தியாவில் உள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலான அம்மாடி ஆத்தாடி என்ற பாடலுக்கு ஏற்ப அசைந்தபடி ஜனனி இருக்கின்றார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
