LATEST NEWS
பாரதி கண்ணம்மா சீசன் 2…. ஹீரோவாக களமிறங்கும் சன் டிவி நாயகன்…. புகைப்படத்துடன் இதோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கிட்டத்தட்ட 1000 எபிசோடிகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அருள் மற்றும் ரோஷினி நாயகன் நாயகியாக நடிக்க தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பானது.
இப்போது சீரியல் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ஒரு வழியாக தற்போது சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த இரண்டாவது சீசனில் சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன ரோஜா தொடரில் நாயகனாக நடித்த சிப்பு இதில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
