LATEST NEWS
மனைவியுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கிய இயக்குனர் ஹரி…. திறந்து வைத்த நடிகர் சூர்யா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இயக்குனர் ஹரி.
பல கமர்சியல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான யானை திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ஹரி படம் இயக்குவதை தாண்டி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஹரி இயக்குனர் பாலசந்தரிடம் கல்கி திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.
அதன் பிறகு இயக்குனர் சரண் இயக்கத்தில் அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பிறகுதான் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இவர் முதன்முதலாக தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து சாமி திரைப்படத்தை இயக்கிய ஹரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பிடித்த கோவில், அருள், தாமிரபரணி மற்றும் சேவல் உள்ளிட்ட பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் இவ்வாறு பிசியாக இருந்த இயக்குனர் அரி தன்னுடைய அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது மனைவியுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக இயக்குனர் ஹரி டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை திறக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை நடிகர் சூர்யா, தமிழக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு குட்லக் என பெயரிடப்பட்ட இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயகுமார், நடிகை ப்ரீத்தாவின் தங்கையான ஸ்ரீதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
