LATEST NEWS
சினிமாவில் நுழைவதற்கு முன்பு தமிழ் நடிகர், நடிகைகள் எப்படி இருந்தாங்க தெரியுமா?…. பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ….!!!
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர் நடிகைகளாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பலரும் உள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளனர். அதுவே சினிமாவில் நுழைந்த பிறகு தற்போது ரசிகர்களை கவரும் விதமாக உள்ளனர். அப்படி தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சின்னத்திரை சீரியல்களில் எப்படி இருந்தார்கள் என்பது குறித்த சில புகைப்படங்களை இதில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
பெண்களின் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் மேடி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் மாதவன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராக்கெட்டரி நம்பி விளைவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாதவன் சந்தோஷ் சிவன் இயக்கிய சந்தன மரத்தாலான விளம்பரத்தில் பணியாற்றினார்.
தன்னுடைய கட்டுக்கோப்பான உடலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் விக்ரம். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் அவ்வளவு அதிகமாக ஹிட் கொடுக்காத நிலையில் அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமே தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார். விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார்.
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி சன் டிவி சீரியலான ‘பெண்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் 90களில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளார். தற்போது இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக செம்ம ஸ்மார்ட் ஆக உள்ளார். இவர் கன்னட தொலைக்காட்சித் துறையிலும், கன்னட சினிமாவிலும் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கே. பாலச்சந்தரின் டூயட் என்ற படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மலையாள நடிகையான சாய்பல்லவி தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார். பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தனுஷின் மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி பலரையும் கொள்ளை அடித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் குழந்தைகளின் ஃபேவரிட் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் மிமிக்ரி செய்து சினிமாவில் கால் தடம் பதித்தார். குறிப்பாக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் காமெடி என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது சந்தானம் தான். தற்போது அவர் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு நடிகை ராதிகா நடித்த அண்ணாமலை தொடர் சன்டிவியில் ஒளிபரப்பானது. அந்த தொடரில் நடிகர் சந்தானம் மிகச்சிறிய ரோலில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஷக்கலக்கா பூம் பூம் என்ற சீரியலின் மூலம் தான் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார்.
