VIDEOS
அடப்பாவிங்களா இப்படி பண்ணிட்டீங்களே?… நீயா நானா செட்டில் புதிய கடை…. திணறிய கோபிநாத்…. வெளியான ப்ரோமோ….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் என்ற ஒரே தொகுப்பாளர் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான தலைப்புகள் கொண்டு பரபரப்பான விவாதத்துடன் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கோபிநாத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இந்த வாரம் எடுத்துக்கொண்ட தலைப்பு 90ஸ் கிட்ஸ் 2k கிட்ஸ் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் 90ஸ் கிட்ஸ் ஆக இருக்கும் நபர்களை விமர்சிக்கும் 2கே கிட்ஸ் இருக்கும் நிலையில் அதனைக் கொண்டு இந்த வாரம் தலைப்பு பேசப்பட்டது.
பொதுவாகவே நாம் வாழ்ந்த நாட்களில் சின்ன சின்ன சுவாரசியமான விஷயங்கள் நிறைந்த விளையாட்டுக்கள் இருக்கும். அவர்களின் ரசனையை புராணம் என்று கூறி அரட்டை செய்யும் இளைஞர்களின் பேச்சையும் அதற்கு கோபிநாத் கொடுக்கும் ரியாக்ஷனும் வெளியாகி உள்ளது.
