VIDEOS
“International Dance Day”… கணவருடன் வேற லெவலில் நடனமாடி வீடியோ வெளியிட்ட நடிகை சிம்ரன்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் மற்றும் விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
தனது சிறுவயது நண்பரான தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கம் தலை திருப்பாத இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவான “ராக்கெட்டரி நம்பி விளைவு” என்ற திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்ரன்.
இவருக்கு தற்போது 47 வயது. இருந்தாலும் 47 வயதிலும் தனது இளமையை அப்படியே வைத்துள்ளார் சிம்ரன். இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக சிம்ரன் களமிறங்கி இருக்கிறார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சிம்ரன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது இன்டர்நேஷனல் டான்ஸ் டே ஸ்பெஷலாக அவர் தனது கணவருடன் நடனமாடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
