LATEST NEWS
அவன் இவன் பட நடிகை மது ஷாலினியின் கணவரை பார்த்துள்ளீர்களா?…வைரலாகும் புகைப்படம்…
இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அவன் இவன்’ இப்படமானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷால் ,ஆர்யா, ஜி எம் குமார் ,ஆர் கே, ஜனனி ஐயர் ,மது ஷாலினி ,அம்பிகா ,ஆனந்த் வைத்தியநாதன், பிரபாகரன், சூர்யா ,பாலா போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை மது ஷாலினி. இவரின் உண்மையான பெயர் அசுமா பர்வீன். இவர் ஹைதராபாத்தில் பூர்விகமாக கொண்டவர்.
இவர் தந்தை ஹமீது ஒரு தொழிலதிபர்,தாய் போலபிரகதா ராஜ் குமாரி ஒரு வழக்கறிஞர். தந்தை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர், தாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். நடிகை மது ஷாலினி மிகுந்த ஆர்வத்துடன்பாரம்பரிய நடனமான குச்சிப்புடி நடனத்தை கற்றுக்கொண்டார்.
அதன் பிறகு இவர் மாடலிங் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியடையும் பெற்றார். இதை தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்தார். நடிகை மது ஷாலினி சிறிது காலம் தொலைக்காட்சி தொகுப்பாளனியாக பணியாற்றினார் .
அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது 2006ஆம் ஆண்டு வெளியான ‘கிடகிதலு’திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பிறகு குறைந்த செலவில் தமிழில் எடுக்கப்பட்ட படம்’பழனியப்பா கல்லூரி’.இந்த படத்தில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படமானது மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இவர் அடுத்து நடித்த தமிழில் படம் ‘பதினாறு’. இப்படமானது மிகவும் தாமதமாக திரையரங்குகளில் வெளியானது.இப்படம் ஆனது மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இவரின் கதாபாத்திரமானது நல்ல விமர்சனத்தைப் பெற்றது .
இவர் தமிழில் பிரம்மன்,தூங்கா வனம்,பஞ்சராக்ஷரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘ரேஞ்சர்’ என்ற ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவர் Expiration date, 9 hours போன்ற web series ல் நடித்துள்ளார்.
நடிகர் மது ஷாலினி கோகுல் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
