CRIME
“ஆசிரியையா..? இல்ல அரக்கியா.?” வகுப்பறையில் கதறிய 3 ஆம் வகுப்பு சிறுமி.. ஆசிரியை செய்த கொடூர காரியத்தை பாருங்க.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயிலும் அனோகி என்ற சிறுமிக்கு அவதி என்ற ஆசிரியர் கொடூரமான முறையில் உடல் ரீதியான சித்திரவதைகளை அளித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த ஆசிரியர் தன்னை வழக்கமாகத் திட்டி, அடித்து துன்புறுத்துவதோடு, தலைமுடியைப் பிடித்து கொடூரமாக இழுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் சாட்டியுள்ளார். பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளிடமும் அந்த ஆசிரியர் தொடர்ந்து இது போன்ற தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி கற்க வரும் பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியரே இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டதும், அதற்கு பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்ததும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. தகுதியற்ற மற்றும் ஒழுக்கமற்ற இது போன்ற ஆசிரியர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்
