CRIME
“நான் எந்த தப்பும் செய்யல” பள்ளி மாணவனின் வாழ்க்கையைச் சிதைத்த பொய் வழக்கு” 5 ஆண்டுகள் நரக வேதனை… இறுதியில் வெளியான திடுக்கிடும் உண்மை..!!
2002-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அசாத்திய கால்பந்துத் திறமை படைத்த 16 வயதான பிரையன் பேங்க்ஸ் என்ற வாலிபர் மீது, அவரது பள்ளித் தோழி கற்பழிப்பு குற்றம் சாட்டினார். தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று பிரையன் வாதிட்ட போதிலும், ஆயுள் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தால் வேறு வழியின்றி ‘பிளீ டீல்’ என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவரது வளமான விளையாட்டு வாழ்க்கையும் எதிர்காலமும் ஒரே நாளில் இருண்டன.
சிறையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை அனுபவித்த பிறகு, பிரையனின் வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. குற்றம் சாட்டிய பெண், தான் பொய் சொன்னதாக அவரிடமே ஒப்புக்கொண்டார். இந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டு தொடரப்பட்ட வழக்கின் முடிவில், 2012-ஆம் ஆண்டு பிரையன் பேங்க்ஸ் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் போலி என நிரூபிக்கப்பட்டு, அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது பிரையன் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரது நெஞ்சையும் உருக்கியது.
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரையன் தனது சுதந்திரத்தை மீட்டெடுத்தாலும், சிறையில் அவர் கழித்த இழந்த இளமைக்கால வருடங்களையும், அவரது அழிந்த விளையாட்டுப் பயனத்தையும் எந்தத் தீர்ப்பாலும் திரும்பத் தர முடியவில்லை. பின்னர் இவர் தனது விடாமுயற்சியால் குறுகிய காலம் NFL கால்பந்து தொடரில் விளையாடினார். இவரது வாழ்க்கை வரலாறு “பிரையன் பேங்க்ஸ்” என்ற திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு, தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் அப்பாவி மனிதர்களின் குரலாக இன்றும் உலகளவில் பேசப்பட்டு வருகிறது.
