“எங்க பொண்ணு மேலே கை வைப்பியா..?” ஸ்கேன் சென்டருக்குள் அத்துமீறிய டாக்டர்…. அலறாமல் குடும்பத்தை வரவழைத்த கெத்து பெண்.. அடுத்து நடந்த ஆக்ஷன் க்ளைமாக்ஸ்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“எங்க பொண்ணு மேலே கை வைப்பியா..?” ஸ்கேன் சென்டருக்குள் அத்துமீறிய டாக்டர்…. அலறாமல் குடும்பத்தை வரவழைத்த கெத்து பெண்.. அடுத்து நடந்த ஆக்ஷன் க்ளைமாக்ஸ்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகரில், தனியார் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை, பெண்ணின் குடும்பத்தினர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது அத்துமீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போது, மருத்துவர் அவரை வேலையை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடையாத அந்த இளம் பெண், உடனடியாகத் தனது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மருத்துவரின் கொடூரச் செயலைக் கேட்டு ஆத்திரமடைந்து அவரை நடுரோட்டில் வைத்துப் பலத்த அடி வெளுத்துள்ளனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவருக்குப் பெண்ணின் குடும்பத்தினரே நேரடியாகத் தர்ம அடி கொடுத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in