CRIME
“அய்யோ அது மனுஷனா, மிருகமா..?” நடுரோட்டில் சிதறிக் கிடந்த இருதயம், கல்லீரல்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. பின்னணியில் இருக்கும் கொடூர மர்மம்..!!
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சின்ன வங்கரா பைபாஸ்சாலைக்கு அருகில், மனித உடலின் உள் உறுப்புகளான இருதயம் மற்றும் கல்லீரல் போன்ற பாகங்கள் ரோட்டில் சிதறிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் திடீரென உறுப்புகள் கிடப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள் கடும் பீதியடைந்து, உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு கண்டெடுக்கப்பட்ட அந்த உடல் பாகங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அந்த உறுப்புகள் மனிதனுடையதா அல்லது ஏதேனும் விலங்கினுடையதா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மருத்துவப் பரிசோதனையின் முடிவிலேயே அது குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அவை மனித உறுப்புகள் என்பது உறுதியானால், யாரேனும் ஒருவரைக் கொலை செய்துவிட்டு உடலை மறைப்பதற்காக இவ்வாறு பாகங்களை வெட்டி வீசிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், கொலை வழக்காகப் போலீசார் தங்களின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
