LATEST NEWS
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்..! 67% ஓய்வூதியம் உயருமா..? 8ஆவது ஊதியக் குழுவில் வெளியான செம அப்டேட்..!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8ஆவது ஊதியக் குழுவின் மீது அதிக எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் உள்ளன. பல முக்கிய சங்கங்கள் தங்களது மனுக்களை 8ஆவது ஊதியக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளன. இந்த 8ஆவது ஊதியக் குழுவின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஊழியர்களும், குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருபவர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். மேலும், தற்போதைய மற்றும் எதிர்கால ஓய்வூதியதாரர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்றும், உயர்ந்த ஓய்வூதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் கோரியும் பல ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
8ஆவது ஊதியக் குழுவானது 2.5, 3 அல்லது 3.5 என்ற ஃபிட்மென்ட் காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஓய்வூதியதாரர்கள் இறுதியில் எவ்வளவு தொகையைப் பெற முடியும் என்ற கேள்வி உள்ளது. ரூ. 25,000 முதல் ரூ. 75,000 வரையிலான தற்போதைய அடிப்படை ஓய்வூதியத்துக்கான கணக்கீடுகள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஓய்வூதியக் கட்டமைப்பின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்கள் பொதுவாக, அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் அல்லது கடைசி 10 மாதங்களின் சராசரி ஊதியத்தில் 50 சதவீதம் என்ற கணக்கில் அடிப்படை ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர். உதாரணமாக, கடைசியாக பெறப்பட்ட அடிப்படைச் சம்பளம் ரூ. 50,000 ஆக உள்ள ஒரு ஊழியர் ரூ. 25,000 அடிப்படை ஓய்வூதியமாகப் பெறலாம். அதேபோல, ரூ. 1 லட்சம் அடிப்படைச் சம்பளம் பெற்றவர் ரூ. 50,000 அடிப்படை ஓய்வூதியமாகப் பெறலாம்.
பல முக்கிய ஊழியர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் 8ஆவது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியம் தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளன. தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனைக் குழு மற்றும் அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை முறையே முழு ஓய்வூதியத்தை கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும் உயர்த்தக் கோரிக்கை வைத்துள்ளன. மேற்கண்ட கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஃபிட்மென்ட் காரணிகள் கற்பனையான அனுமானங்கள் மட்டுமே. அவை 8ஆவது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பரிந்துரைகள் அல்ல.
