இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் யார் தெரியுமா?… இதோ பாருங்க…. - Cinefeeds
Connect with us

CINEMA

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் யார் தெரியுமா?… இதோ பாருங்க….

Published

on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்புக்கும் நடனத்துக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில்  நடிப்பதோடு பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘புஷ்பா’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில்’ புஷ்பா’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருக்கும். தெலுங்கு நடிகர் ஆன அல்லு அர்ஜுன் தமிழில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அறிமுகமானார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்து புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது அப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகர் என தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.