LATEST NEWS
காதலியை அறிமுகம் செய்த ஜெயிலர் பட நடிகர் ஜாபர்.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?.. வைரல் வீடியோ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கும் மாஸ் ஹீரோக்களுடன் துணை வேடங்களில் நடித்த நடிகர்களில் ஒருவர்தான் ஜாபர். சிவராஜ்குமார் உடன் இருக்கும் அடியாட்களில் இவரும் ஒருவர். இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருந்தார்.
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் பாவ கதைகள் என்ற வெப் தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் முதலில் நடித்தார். அதன் பிறகு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ள நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினி சார் என்னை பார்த்து அடிக்கடி எப்ப கல்யாணம் பண்ணுவாய் என்று கேட்டுக் கொண்டிருப்பார்.
அதன் பிறகு நான் என்னுடைய காதலியின் போட்டோவை காண்பித்தவுடன் உங்களுடைய காதலின் நன்றாக இருக்கிறார் என்று ரஜினி பாராட்டினார். ஒரு நாள் எனது காதலியை அழைத்துக் கொண்டு ரஜினி சாரை பார்க்க சென்றபோது எனது காதலை மிகவும் சந்தோஷப்பட்டார் என்று அவர் கூறியுள்ள நிலையில் தற்போது அவர் காதலியின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.