LATEST NEWS
“தாய் இறந்து ஒரே வாரத்தில் சத்யராஜ் செய்த செயல்”… என் அம்மா தான் இதற்கு முக்கிய காரணம்.. உருக்கமாக பேசிய சத்யராஜ்..!!

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள அங்காரகன் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் ஆக உருவாக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, மகேஷ் மற்றும் அப்பு குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சத்யராஜின் தாயார் உயிரிழந்த நிலையில் சமீபத்தில் சத்யராஜ் அங்காரகன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது தாய்குறித்து பல சுவாரசிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதாவது, அம்மா இறந்து ஒரு வாரத்திற்குள் நிகழ்ச்சியில் பங்கேற்பதை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எனது அம்மா தான் முக்கிய காரணம். என்னுடைய தாய் ஒரு முருகன் பக்தர். அவர் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் முறை கந்த சஷ்டி கவசத்தை கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் சத்யராஜ் ஒரு பெரிய ஆர்டிஸ்ட் அவனுக்கு சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. அவனுடைய நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அதனால் என்றாவது ஒருநாள் நான் மரணிக்கும் போது என் மகனை சடங்கு சம்பிரதாயங்களை செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது என்று சத்யராஜ் தனது அம்மா கூறியதாக இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
சம்பிரதாயபடி வீட்டில் மரணம் ஏற்பட்டால் 16 நாட்கள் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று சொல்வார்கள் ஆனால் என் தாய் இறந்து ஒரே வாரத்தில் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு என் அம்மா தான் முக்கிய காரணம் என்று சத்தியராஜ் மனமுருகி பேசினார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.