LATEST NEWS
சினிமாவின் டாப் 3 இசையமைப்பாளர்கள்.. சிறுவயதில் ஒன்றாக எடுத்துக்கொண்ட பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படம்..!!

திரை உலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா. அதனைப் போலவே பிரேம்ஜி நடிகராக மக்கள் மத்தியில் அறியப்பட்டாலும் அவரும் ஒரு இசையமைப்பாளர் தான். இவர்கள் மூவருமே இசை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.
இயக்குனர் வெங்கட் பிரபு, பாடகி பவதாரணி இருவரும் உடன் பிறந்தவர்கள் ஆவர். கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி. இளையராஜாவின் மகன் தான் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் சிறுவயதில் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பிரேம்ஜி ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
இதுவரை பலரும் பார்க்காத அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் மூன்று பேரும் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளனர். யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு அடுத்ததாக இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.