LATEST NEWS
நெல்சன் முதல் மாரி செல்வராஜ் வரை கவின் திருமணத்தில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்… வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.
அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார்.
முதல் முதலில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் நடித்த அடுத்த படம் லிப்ட் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் தனியார் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் கவின் தனது நீண்ட நாள் காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது கவின் திருமண நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.