VIDEOS
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண நேரில் சென்ற மோகன்லால்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மோகன்லால். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மொழியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதாவது உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் மற்றும் இருவர் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்தியாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான இவர் தற்போது ராம் முதல் பாகம் மற்றும் மலைக்கோட்டை வாலிபன் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே மோகன்லால் கடந்த 1988 ஆம் ஆண்டு சுஜித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பிரணவ் மற்றும் விஷ்மயா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களில் பிரணவ் தனது தந்தையைப் போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் மோகன்லால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்ப்பதற்கு சென்று இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க