LATEST NEWS
அட நடிகர் ராதாரவி இது?… வெள்ளை சட்டையை கழட்டி வச்சிட்டு இப்படி மாடர்னா மாறிட்டாரே.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் 70 80களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் தான் எம் ஆர் ராதா. இவரின் நடிப்புக்கு பலரும் அடிமை. இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
அப்படிப்பட்ட புகழுக்குரிய எம் ஆர் ராதாவின் மகன்தான் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர் ராதாரவி. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளன. அவர்கள்தான் நடிகை ராதிகா மற்றும் நடிகை நிரோஷா.
இதனிடையே நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்திருப்பார்.
இவரின் வில்லத்தனத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். 80 மற்றும் 90களில் ரசிகர்கள் மத்தியில் கொடி கட்டி பறந்த இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்பயணத்தில் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதே சமயம் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எப்போதும் வெள்ளை நிற பேண்ட் சர்ட்டில் வளம் வரும் இவர் தற்போது கோட் சூட் மற்றும் கூலிங் கிளாஸ் போட்டு ஒரு கலக்கலான போட்டோ சூட் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.