LATEST NEWS
“டி.எஸ்.பி உடையில் வந்த போலி அதிகாரி…” கள்ளக்காதலனுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்…. வசமாக சிக்கிய ஜோடி…. பகீர் சம்பவம்…!!
வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது பெண்ணிற்கு, மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை சீருடை அணிய வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற, குமரேசன் அவருக்கு ஒரு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) உடையை வாங்கிக் கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரேசனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண் போலி டி.எஸ்.பி சீருடையை அணிந்து கொண்டு அவருடன் மிகவும் மிடுக்காக வேலூர் நகரத்திற்கு வந்துள்ளார்.
இருவரும் வேலூர் கோட்டைப் பகுதிக்குச் சென்று பிறந்தநாள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் துறையினர், இதுவரை பார்த்திராத புதிய பெண் டி.எஸ்.பி-யைக் கண்டு சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்தனர். அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் ஆசைக்காகப் சீருடையை அணிந்தது அம்பலமானது. அரசுப் பணியில் இல்லாமல் காவல்துறை சீருடையைப் பொதுவெளியில் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இனி இது போன்ற தவறுகளில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
