“அடேங்கப்பா… இவர்தான் நிஜ பாகுபலி..” சீறிப்பாய்ந்த ராஜநாகம்… குடும்பத்துக்காக சிங்கமாய் நின்ற ரியல் ஹீரோ.. நடுங்க வைக்கும் 42 வினாடி வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேங்கப்பா… இவர்தான் நிஜ பாகுபலி..” சீறிப்பாய்ந்த ராஜநாகம்… குடும்பத்துக்காக சிங்கமாய் நின்ற ரியல் ஹீரோ.. நடுங்க வைக்கும் 42 வினாடி வைரல் வீடியோ..!!

Published

on

வீட்டின் கூடத்திற்குள் திடீரென நுழைந்த பிரம்மாண்டமான ராஜநாகத்திடமிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற, ஒரு மனிதன் காட்டிய துணிச்சலான சம்பவம் குறித்த 42 வினாடி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 3 அடி உயரத்திற்குப் படத்தை விரித்து ஆக்ரோஷமாக நின்ற அந்த விஷப் பாம்பைக் கண்டு குடும்பத்தினர் அலறிய நிலையில், அந்த மனிதன் கையில் தடியுடன் தைரியமாக எதிர்கொண்டுள்ளான். பாம்பு வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, அச்சமின்றி அதன் வாலைப் பிடித்து வாசலுக்கு வெளியே இழுத்துச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிய இந்தக் காட்சி காண்போரை உரைய வைத்துள்ளது.

https://www.instagram.com/reel/DbHsB6GoZ2y/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு 17 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வைரல் வீடியோ, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அந்த மனிதனின் தைரியத்தைப் பலர் பாராட்டி வரும் நிலையில், விஷப் பாம்புகளின் வாலைப் பிடிப்பது உயிருக்கே பேராபத்து என வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான சூழல்களில் உடனடியாக பாம்பு பிடிக்கும் மீட்புக் குழுவையே அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in