LATEST NEWS
கணவரை பிரிந்த நிலையில் இது தேவையா?… அந்த இடத்தில் டாட்டூ போட்ட பிக்பாஸ் ரச்சிதா.. என்ன போட்டு இருக்கார் தெரியுமா..??

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான். இந்த சீரியல் மூலம் மீனாட்சி ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களிலும் வாழக்கூடிய பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.
அந்த சீரியலில் மிகவும் பிரபலமான இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்தார். சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட ரட்சிதா தினேஷ் மீது ஆபாச வார்த்தைகள் பேசியதாக புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா தற்போது திரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆந்தையின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.