“ஏன் புலம்பிட்டே இருக்க…?” போதையில் வந்த பேரன்…! 94 வயது பாட்டிக்கு நடந்த கொடூரம்…. மனதை உலுக்கிய சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏன் புலம்பிட்டே இருக்க…?” போதையில் வந்த பேரன்…! 94 வயது பாட்டிக்கு நடந்த கொடூரம்…. மனதை உலுக்கிய சம்பவம்…!!

Published

on

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது தாயார் சரோஜா, வயது முதிர்வு காரணமாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டின் வெளிப்புறக் கட்டிலில் படுத்துக் கிடந்த பாட்டி சரோஜாவை காண்பதற்காக அவரது பேரன் மகேஷ் (26) என்பவர் முழு மது போதையில் வந்துள்ளார்.

அப்போது சரோஜா தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மகேஷ், எதற்காக எப்போதும் இவ்வாறு சத்தமிட்டுக் கொண்டே இருக்கிறாய் என்று கோபமாகக் கேட்டு அவரது கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். பேரனின் இந்த எதிர்பாராத கொடூரத் தாக்குதலால் நிலைதடுமாறிய அந்த மூதாட்டி, படுத்திருந்த கட்டிலிலேயே அசைவற்று மயங்கி விழுந்தார்.

Advertisement

சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த சரோஜாவின் இளைய மகன் ராஜி, மயங்கிக் கிடந்த தாயாரைச் சோதித்துப் பார்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்துச் சரோஜாவின் மற்றொரு பேரன் கார்த்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில், சதுரங்கப்பட்டினம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றியதுடன் தலைமறைவாக இருந்த மகேஷைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் மது போதையில் பாட்டியைத் தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in