VIDEOS
இத நான் ஆவணத்துல சொல்லல… “யாரும் என் ட்ரஸ்டுக்கு பணம் அனுப்பாதீங்க, என் குழந்தைகளை நானே பாத்துக்குறேன்”.. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து இருக்கிறார். பி.வாசு இயக்கி இருக்கும் இந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்தத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனிடையே சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவரின் அறக்கட்டளைக்கு பலரும் டொனேஷன் கொடுத்து வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய ட்ரஸ்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். என்னுடைய குழந்தைகளை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க