குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகர் ரகுமான்.. வெளியான அழகிய புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகர் ரகுமான்.. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் ரகுமான். இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான சங்கமம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.

அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் மழைத்துளி மழைத்துளி மழை சங்கமம் என்ற பாடலின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ரகுமானின் முழு பெயர் ரஷின் ரகுமான். இவர் 1967ஆம் ஆண்டு துபாயில் பிறந்தார்.

Advertisement

இவரின் மூதாதையர் குடும்பம் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர்கள். இவர் 1984ஆம் ஆண்டு கூடவிடே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக கேரளா அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு மற்றும் மொத்தம் 16 மலையாள திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் 180 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், சங்கமம்,வாமணன் மற்றும் துருவங்கள் பதினாறு என அன்றிலிருந்து இன்றுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தற்போதும் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் மெகரு நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் தங்கை தான் இவர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் ரகுமான் நேற்று ஓணம் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in