LATEST NEWS
சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன?… முதல்முறையாக வெளியான சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இரண்டாம் பாகத்தில் ரஜினியை நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை முதல் முறையாக பி வாசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கான தூண்டுதலை முதலில் கொடுத்தது ரஜினியின் மனைவி லதா தான். ஏன் சந்திரமுகியில் உள்ள வேட்டையின் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து ஒரு திரைப்படம் பண்ண கூடாது என்று கூறினார்.
அதன் பிறகு அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து ரஜினியிடம் காட்டிய போது அது சந்திரமுகி 2 இல்லை வேட்டையனாக மட்டும் இருக்கும் தனி ஒரு திரைப்படமாக இருந்துள்ளது. அப்போது ரஜினி சங்கரின் ரோபோ திரைப்படத்தில் பிசியாக இருந்ததால் முதலில் கன்னடத்தில் இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு வாருங்கள் என்று வாசுவிடம் கூறியுள்ளார். அதனால் ஆப்த மித்ரா என்ற தலைப்பில் கன்னடத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் திரும்பவும் ரஜினி இடம் கேட்டபோது ஒரு வருடம் ஆகியும் ரோபோ படம் முடியாமல் இருந்துள்ளது.
அந்தக் காரணத்தை ரஜினி கூறிய நிலையில் அப்படியே அந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது. பிறகு குசேலன் திரைப்படத்திற்காக 10 நாட்கள் கால் சூட் கொடுத்து வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த நிலையில் அந்த திரைப்படத்திற்கான விளம்பரம் அதிகமாகி விமர்சனம் குறைவாகிவிட்டதாக ரஜினி வருத்தப்பட்டு உள்ளார். விளம்பரத்திற்கு ஏற்ப படத்தில் அதிகமாக வந்திருந்தால் படம் நன்றாக ஓடி இருக்கும் எனவும் ரஜினி வருந்திய நிலையில் , நடிகர்களை நடிக்க வைத்து அந்த படத்தின் பெயரை கெடுக்க வேண்டாம். வேண்டுமென்றால் நீங்கள் வேறு ஹீரோவை வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு தான் இவருடைய சிஷ்யனாக இருக்கும் லாரன்ஸை வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் பி வாசு. சந்திரமுகி 2 திரைப்படத்தில் அவருக்கு பதிலாக தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து முடித்துள்ளார்.