படம் பார்க்க தியேட்டருக்கு போன நாக சைதன்யா.. திடீரென இடையே வந்த சமந்தா.. உடனே என்ன செய்தார் தெரியுமா..?? - Cinefeeds
Connect with us

CINEMA

படம் பார்க்க தியேட்டருக்கு போன நாக சைதன்யா.. திடீரென இடையே வந்த சமந்தா.. உடனே என்ன செய்தார் தெரியுமா..??

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை தொடர்ந்து சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நாகசெய்தன்யா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது குஷி திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அதனை பார்த்த நாக சைதன்யா கடுப்பாகி பாதிலேயே திரையரங்கில் இருந்து வெளியேறியதாக சில தகவல் வெளியானது.

முன்னாள் மனைவி சமந்தாவின் மீது இருக்கும் வெறுப்பு காரணமாக நாக சைதன்யா திரையரங்கில் இருந்து உடனடியாக வெளியேறியதாக இணையத்தில் செய்தி பரவியது. ஆனால் இது தொடர்பாக தெலுங்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செய்தி முற்றிலும் தவறு, தயவுசெய்து அந்த செய்தியை மாற்றி அமைக்குமாறு நாகசெய்தனியா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.