LATEST NEWS
அட நடிகர் ரமேஷ் திலக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா?… வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!
வாழ்வதற்காக சென்னை வந்து திரைத்துறையில் சாதித்து பெரிய இடத்திற்கு வந்தவர்கள் பலரும் உள்ளனர். அப்படி திரை உலகில் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடிக்க பல தடைகளை தாண்டி வந்த நடிகர் தான் ரமேஷ் திலக் . இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார்.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காக்கா முட்டை, டிமான்டி காலனி, மங்காத்தா மற்றும் ஓ மை கடவுளே , குட் நைட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் முதலில் ரேடியோவில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் அதன் மூலம் படிப்படியாக உயர்ந்தார். இன்று காமெடியில் மற்றும் துணை கதாபாத்திரங்களில் அசத்தி வரும் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு நவலட்சுமி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அண்மையில் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் ரமேஷ் திலக் சிங்கப்பூர் சுற்றுலா சென்று இருந்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
