16-வது திருமணநாளைக் கொண்டாடும் திரைத்துறையே கண் வைக்கும் கியூட் ஜோடி ஸ்ரீகாந்த் – வந்தனா… குவியும் வாழ்த்துக்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

 16-வது திருமணநாளைக் கொண்டாடும் திரைத்துறையே கண் வைக்கும் கியூட் ஜோடி ஸ்ரீகாந்த் – வந்தனா… குவியும் வாழ்த்துக்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் ரசிகைகளால் சாக்லேட் பாயாக கொண்டாடப்படுபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் 2002ல் வெளியான ‘ரோஜா கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிகமான பெண் ரசிகைகளை கவர்ந்தார். ‘ரோஜா கூட்டம்’ படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

ஏப்ரல் மாதத்தில், பூ, பார்த்திபன் கனவு, மெர்க்குரி பூக்கள், ஜூன் மற்றும் சதுரங்கம் என பல திரைப்படங்களில் நடித்தார்.  இதன் மூலம் அவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.  நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை 2008ல் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு அகில் மற்றும் அகானா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் – வந்தனா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  முதலில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வந்தனா சகோதரர் மீதான கிரிமினல் கேஸை காரணம் காட்டி, ஸ்ரீகாந்த் குடும்பம் பின்வாங்கியது. இதையடுத்து கோர்ட்டில் இருதரப்பும் மாறி, மாறி வழக்கு போட்டது. அதன் பின்னர் நேரில் சந்தித்து சமாதானம் ஆன இரு குடும்பமும், திருமணத்தை சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர்.

திரைத்துறையியே கண் வைக்கும் அளவிற்கு க்யூட் ஜோடியான ஸ்ரீகாந்த் – வந்தனா தம்பதியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஸ்ரீகாந்தியின் மனைவி வந்தனா. இவர் தற்பொழுது 16 வது திருமண நாளை கணவருடன் கொண்டாடிய ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vandana Srikanth (@vandanasrikanth)