நடிகர் விஜய் சேதுபதியின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா?… வைரலாகும் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்… - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் விஜய் சேதுபதியின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா?…  வைரலாகும் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்…

Published

on

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், குணச்சித்திர வேடம், வில்லன் என வெளுத்து வாங்கி வருகிறார். அந்த வகையில் நடிகர் மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’ , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ மற்றும்  விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் முரட்டு வில்லனாக மிரட்டியுள்ளார்.

தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜெசி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்கிற மகன் மற்றும் ஸ்ரீஜா என்கிற மகளும் உள்ளனர். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, 2015 ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில், விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து சிந்துபாத், ஜூங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபலங்கள் பலரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய்சேதுபதி தனது மகன் , மகள் , மனைவி என குடும்பத்தோடு ஓணம் கொண்டாடிய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம விஜய் சேதுபதியின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.