அடடே!.. அப்புடியா?…’கடைசி விவசாயி’ திரைப்படத்துக்காக நல்லாண்டி வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?… - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே!.. அப்புடியா?…’கடைசி விவசாயி’ திரைப்படத்துக்காக நல்லாண்டி வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?… 

Published

on

பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் கடைசி விவசாயி. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி இந்த மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்கள் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்பாவித்தனமான விவசாயி என்பதால் நல்லாண்டி இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் விட்டார். படத்தில் அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. மேலும், படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருக்கிறார்கள். மண்பானை செய்வதில் தொடங்கி, அரிசி, திருவிழாவுக்கான இசைக்கருவிகள் என அனைத்து விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

Advertisement

படத்தில் இயற்கையான முறையில் விவசாயம், காலப்போக்கில் அது செயற்கை ரசாயன உரங்களாக மாறியது,ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை பயன்படுத்துபவர்கள் என பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.கொரோனா காலத்திற்கு முன்பே இப்படம் துவங்கப்பட்டது. இடையில் படப்பிடிப்பு தடைபட்டு 4 வருடங்கள் இப்படம் தயாரிப்பில் இருந்தது.

இதன் காரணமாக இந்த படம் வெளியாகும் முன்பே அப்படத்தில் நடித்த நல்லாண்டி இறந்துபோயிருந்தார். சமீபத்தில் 69வது தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது இப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நல்லாண்டிக்கும் சிறப்பு விருது கொடுக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி இந்த படத்தை பார்க்கவும் இல்லை. விருதை வாங்கவும் இல்லை.

Advertisement

தற்பொழுது நல்லாண்டி இத்திரைப்படத்திற்காக வாங்கிய சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, படப்பிடிப்பு இருந்தால் ஒரு நாளைக்கு ரூ.500 முதல் 1000 வரை கொடுக்கப்பட்டதாகவும், படம் முடிந்த பின் ரூ. 1 லட்சம் கொடுத்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement