VIDEOS
ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் ஐஸ்வர்யா மேனன்.. வீடியோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் வீரா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதாவது காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சன் டிவியில் தென்றல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க