CINEMA
பல நடிகைகளோடு நெருக்கம்…. கணவர் குறித்து கிசுகிசுத்த பாலிவுட்…. நச் பதிலடி கொடுத்த கஜோல்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் கஜோல் -அஜய் தேவ்கன். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த நிலையில் அஜய் தேவ்கான் திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கிசுகிசுக்கள் எழுந்தது.
இதற்கு கஜோல் தன்னுடைய ஸ்டைலில் நச்சென்று பதில் அளித்துள்ளார். அதில், நான் எப்பொழுதுமே வதந்திகளை நம்பவில்லை. ஏனென்றால் படப்பிடிப்பு எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். அடிப்படை புரிதல் இல்லாமல் திருமண வாழ்க்கையை தொடர முடியாது. அதனால் வதந்திகள் பற்றி எனக்கு என்றைக்கும் கவலை இல்லை என்று கஜோல் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.