CINEMA
ஷங்கர் மிரட்டல்… ரஜினி கோபம்…”மாலை வரை ஷாட் எடுக்காமல் அலைக்கழித்த படக்குழு…கார் அருகில் நின்ற நடிகர்… சத்தமாக சிரித்த ரஜினி! இணையத்தில் தீயாய் பரவும் ‘சிவாஜி’ ஷூட்டிங் ஸ்பாட் சீக்ரெட்…!
ரஜினிகாந்த் என்றாலே எப்போதுமே ஒரு தனி ஆச்சரியம்தான். தற்போது 75 வயதாகும் அவர், 30 வயது இளைஞர்களே உழைக்கத் திணறும் இந்தச் சூழலிலும், அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறையையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். குறிப்பாக, பல வருடங்களுக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடிக்கும் திரைப்படம், இந்திய சினிமாவில் ‘ஆயிரம் கோடி’ வசூலை எட்டும் முதல் தமிழ்ப் படமாக மாறும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’, ‘லிங்கா’, ‘தர்பார்’ போன்ற படங்கள் தடம் புரண்டபோதெல்லாம், “ரஜினியின் சகாப்தம் முடிந்தது” என்று விமர்சித்தவர்களின் கூற்றுகளைத் தூள்தூளாக்கி, இன்றும் பாக்ஸ் ஆபீஸில் தனது தனி சாம்ராஜ்ஜியத்தை அவர் கம்பீரமாகத் தக்கவைத்துள்ளார்.
இருப்பினும், ‘சிவாஜி’, ‘லிங்கா’ போன்ற திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தில், தனக்கு மகள் வயதான ஸ்ரேயா, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா போன்ற இளம் நடிகைகளுடன் ரஜினி டூயட் பாடுகிறார் என்ற கடுமையான விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்படத்தான் செய்தன. இந்நிலையில், ‘சிவாஜி’ படத்தின் க்ளைமேக்ஸ் படப்பிடிப்பின் போது, ரஜினியிடம் வயது குறித்துப் பேசிப் படக்குழுவிடம் மாட்டிய சுவாரசியமான அனுபவம் ஒன்றை நடிகர் போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் நடந்த அந்தப் படப்பிடிப்பின் போது ரஜினியிடம் பேசிய போஸ் வெங்கட், தான் பார்த்த ஒரு மலையாளத் திரைப்படத்தைப் பற்றிக் கூறத் தொடங்கி, “சார்.. கதைப்படி ஓப்பன் பண்ணா ஒரு 60 வயது கிழவன்…” என்று விவரிக்க, ரஜினி எதுவுமே பேசாமல் அங்கிருந்து நகர்ந்துள்ளார். சற்று நேரத்தில் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் வந்து, “ரஜினியிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாதா?” என போஸ் வெங்கட்டைக் கண்டிக்க, அன்றைய தினம் அவருக்கு ஷாட் எதுவும் எடுக்கப்படாமல் தவிப்பில் விடப்பட்டுள்ளார். மாலையில் பயத்துடனும் கலங்கிய கண்களுடனும் ரஜினியின் கார் அருகே நின்ற போஸ் வெங்கட்டைப் பார்த்த சூப்பர் ஸ்டார் சத்தமாகச் சிரித்துவிட்டு, “என்னிடமே 60 வயது கிழவன் என்று சொல்கிறாயே! உனக்கு இன்று ஷாட் இல்லை என்று ஷங்கர் சொன்னார், அதான் உன்னை சும்மா கலாய்த்தோம்” எனக் கூறி நெகிழ வைத்துள்ளார். ரஜினியின் இந்த அன்பான குறும்புத்தனம் அவரது எளிமையையும் பெருந்தன்மையையும் காட்டுவதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
