CINEMA
வாழ்க்கையில இரண்டு மூன்று LOVE இருந்தால் தப்பே இல்லை…. ஓப்பனாக பேசிய நடிகை டிடி..!!
டிடி என்ற திவ்யதர்ஷினி கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்து விட்டார்கள். தற்போது டிடி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களோடு கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ‘Do you believe in second love in life? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த இவர், செகண்ட் லவ்வா? காதல் என்பது இரண்டு முறை தான் வருமா? அதெல்லாம் சினிமாவில் சொல்வது. ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து காதல் வந்தால் தான் தவறு. வாழ்க்கையில் இரண்டு மூன்று லவ் இருந்தால் அதில் தவறு இல்லை என்று கூறியுள்ளார்.