திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திய ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்காவா இது?… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… - Cinefeeds
Connect with us

CINEMA

திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திய ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்காவா இது?… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?…

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.

தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார்.

இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பிரியங்கா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ…