கணவருடன் இணைந்து வீட்டில் வரலட்சுமி பூஜை செய்த சீரியல் நடிகை நக்ஷத்ரா.. வெளியான புகைப்படங்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

கணவருடன் இணைந்து வீட்டில் வரலட்சுமி பூஜை செய்த சீரியல் நடிகை நக்ஷத்ரா.. வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தற்போது தமிழ் சினிமாவில் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளை போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இவர் வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாணி ராணி சீரியல் மூலமாக தனது நடிப்பை தொடங்கினார்.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த அசத்தி வருகின்றார்.

இவர் கடந்த வருடம் ராகவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி இன்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு வீட்டில் பூஜை செய்து வழிபட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.