LATEST NEWS
குடும்பத்துடன் ஜாலியாக ஹோட்டலுக்கு டின்னர் சென்ற நடிகை ரம்பா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!

இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.
அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
இவர் தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவித்து விட்ட ரம்பா, ஒரு சில சின்னத்திரை நடன நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி ரம்பா தனது குடும்பத்துடன் ஹோட்டலுக்கு டின்னர் சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.