அட.. உங்களுக்குமா?… ‘எனக்கும் அது நடந்தது’… வேதனையுடன் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து முதல்முறையாக மனம் திறந்த நடிகை விஜயலக்ஷ்மி… - Cinefeeds
Connect with us

CINEMA

அட.. உங்களுக்குமா?… ‘எனக்கும் அது நடந்தது’… வேதனையுடன் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து முதல்முறையாக மனம் திறந்த நடிகை விஜயலக்ஷ்மி…

Published

on

‘சென்னை 600028’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். ‘அதே நேரம் அதே இடம்’ திரைப்படத்தில் இவர் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இவர் அகத்தியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த இவர், சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். தற்பொழுது மீண்டும் சினிமாவில் களமிறங்கி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது திறமையை  வெளிப்படுத்தி சர்வைவர்  நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது,

‘நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும். ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால், அவர்கள் படுக்கைக்கு வருவார்களா என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு முறை இது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அட்ஜஸ்ட்மென்ட் கோரிக்கையுடன் சிலர் என்னை அணுகினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்கவில்லை’ என கூறியுள்ளார். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவ, ரசிகர்கள் இந்த நிலைமை உங்களுக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.