LATEST NEWS
நடிகை பிரியா பவானி சங்கர் வைத்திருக்கும் காரின் விலை இவ்வளவா?… விலையைக் கேட்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் இவர் இசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை கட்டி காதலருடன் சமீபத்தில் குடியேறினார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிப்பை தாண்டி தற்போது ஹோட்டல் தொழிலையும் இவர் தொடங்கியுள்ளார். விரைவில் இவரின் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனிடையே பிரியா பவானி சங்கர் சொந்தமாக bmw X3 என்ற காரை வைத்துள்ளார். தற்போது அந்த காரின் விலை குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. அதாவது பிரியா பவானி சங்கர் வைத்திருக்கும் இந்த காரின் விலை சுமார் 75 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.